விளைநிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தம்பதி உயிரிழப்பு

0 2440
விளைநிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தம்பதி உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே, விளைநிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் இருந்து மின்சாரம் தாக்கி, இளம் தம்பதி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளிப்புதூர் பகுதியை சேர்ந்த ஜெயபிரகாசம் - அஸ்வினி தம்பதிக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில், நேற்று மாலை இருவரும் மேய்ச்சலுக்கு சென்ற பசுமாட்டை தேடி வயலுக்கு சென்றிருக்கின்றனர். இந்த நிலையில், காலையில் அவ்வழியாக சென்றவர்கள் ஜெயபிரகாசமும், அஸ்வினியும் சடலமாக கிடப்பதை கண்டு உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.

அருகில் அந்த பசுமாடும் இறந்து கிடந்துள்ளது. காட்டுப்பன்றியிடம் இருந்து வேர்க்கடலை பயிரை பாதுகாக்க விஜயகுமார் என்பவரது விளைநிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தம்பதி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, விஜயகுமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments