மனைவி மற்றும் அவரது அக்கா குடும்பத்தார் கொடுமை தாங்கவில்லை : வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

0 3639

சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மனைவி மற்றும் அவரது சகோதரி குடும்பத்தாரின் கொடுமை தாங்கவில்லை எனக் கூறி, வீடியோ வெளியிட்டு, தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜாம்பஜாரில் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வரும் நித்யா என்பவருக்கு 9 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. நித்யா தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பிய உருக்கமான வீடியோவில், தனது மனைவி நிஷா, அவரது அக்கா உஷா மற்றும் அக்காவின் கணவன், மூவரும் சேர்ந்து தன்னை தகாத வார்தைகளால் திட்டி, அடித்து கொடுமைப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நித்யா, தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டிய மூவருக்கும் தண்டனை வழங்குமாறு கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து நித்யா தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments