காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் ஊழியர் வெட்டிக்கொலை ; டாஸ்மாக் கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டம்

0 9286
டாஸ்மாக் ஊழியர் வெட்டி படுகொலை - ஒருவர் படுகாயம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில், டாஸ்மாக் கடை ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன.

ஒரகடம் டாஸ்மாக் கடையின் விற்பனையாளர்கள் துளசிதாஸ், ராம் ஆகியோர் நேற்றிரவு வழக்கம் போல் பணி முடிந்து கடையின் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்த வண்டியை எடுக்க சென்ற போது, அங்கு பதுங்கி இருந்த மர்ம நபர்கள் சிலர் துளசிதாஸை கத்தியால் சரமாரியாக குத்தியும், தடுக்க முயன்ற ராமை தாக்கிவிட்டும் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

இதில், துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயங்களுடன் ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வரும் போலீசார், 3 தனிப்படை அமைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

இதனிடையே, குற்றவாளியை உடனடியாக கைது செய்யக்கோரியும், ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும், சென்னை, சேலம், திருவள்ளூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூடி, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments