கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை முயற்சி.. தாயும், மகனும் உயிரிழப்பு

0 1689

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலைக்கு முயன்ற நிலையில், தாயும் மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சுல்தான்பேட்டையை சேர்ந்த வெங்காயம் மொத்த வியாபாரம் செய்து வந்த சையத் அக்பருக்கு தொழில் நஷ்டம் காரணமாக கடன் சுமை அதிகரித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், நேற்றிரவு மனைவி பாத்திமா மற்றும் மகன் பர்கத் உடன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது.

தகவலறிந்த உறவினர்கள் 3 பேரையும் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பாத்திமா மற்றும் பர்கத் ஆகியோர் உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் உள்ள சையத் அக்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments