கர்நாடகாவில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் பரிதாபம்... 6 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு

0 4427

கர்நாடகாவில் அசுத்தமான குடிநீரைக் குடித்த 6 பேர் உயிரிழந்தனர். ஹூவினஹடகலி தாலுகாவில் உள்ள மகரப்பி கிராமத்தில் அசுத்தமான தண்ணீரை உட்கொண்டதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பிட்ட கிராமத்தில் ஆழ்குழாய் கிணறுகளுக்கு புதிய குழாய் பதிக்கும் போது, பழைய குழாய்கள் சேதமடைந்து கழிவுநீர் குடிநீரில் கலந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து குடிநீரைக் குடித்த பலருக்கு வாந்தி ஏற்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் அடுத்தடுத்து 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments