வாகனங்களின் ஹாரன்களில் இந்திய இசைக்கருவிகளின் இசை ஒலிக்க சட்டம் கொண்டு வர திட்டம் - மத்திய அமைச்சர்

0 2458
வாகனங்களின் ஹாரன்களில் இந்திய இசைக் கருவிகளின் இசை மட்டுமே ஒலிக்க வேண்டும் என புதிய சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

வாகனங்களின் ஹாரன்களில் இந்திய இசைக் கருவிகளின் இசை மட்டுமே ஒலிக்க வேண்டும் என புதிய சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் நாசிக்கில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய அவர், ஆம்புலன்ஸ்களின் சைரன் ஒலி, கேட்க இனிமையாக இருக்குமாறு மாற்றவும் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆல் இந்தியா ரேடியோவில் காலையில் ஒலிபரப்பை தொடங்கும் போது ஒலிக்கப்படும் இசை போன்றவற்றை பயன்படுத்த யோசித்துவருவதாகவும் கட்கரி பேசியுள்ளார்.

ஒலி மாசு ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளதாகவும், அதில் பெரும்பாலானவை வாகனங்களிலிருந்து வெளிப்படுபவை என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு தீர்வு காண புல்லாங்குழல், வயலின், மவுத் ஆர்கன் உள்ளிட்ட இசைக்கருவிகளின் ஒலி மூலம் ஹாரன் ஒலி அமைக்க ஆய்வு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments