மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் - மு.க.ஸ்டாலின்

0 1778

உத்தரப்பிரதேசத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 300 நாட்களாக விவசாயிகள் போராடி வருவதை மத்திய அரசு அலட்சியம் செய்ததன் விளைவுதான் உத்தரப்பிரதேசத்தில் தொடரும் நிகழ்வுகள் என குறிப்பிட்டுள்ளார்.

கொந்தளிப்பான சூழலை அறியச் சென்ற பிரியங்கா காந்தியும், முன்னாள் முதலமைச்சர் அகிலேஷும் கைது செய்யப்பட்டதை, அறிக்கையில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கொந்தளிப்புக்குக் காரணமானவர்கள் மீது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள முதலமைச்சர், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கும் வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments