இரும்பு வியாபாரி வீட்டில் 131 சவரன் தங்க நகைகள் கொள்ளை...போலீசார் விசாரணை

0 1548

கோவையில் இரும்பு வியாபாரி வீட்டில் 131 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணிகாரம்பாளையத்தைச் சேர்ந்த தினகரன் வெள்ளக்கிணறு பகுதியில் இரும்பு கடை நடத்தி வருகிறார். கடந்த 3-ந் தேதி குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றிருந்த தினகரன், அதிகாலையில் வீட்டுக்கு வந்துள்ளார்.

வீட்டின் முன்பக்க கதவு, படுக்கை அறை கதவு, லாக்கர் உடைக்கப்பட்டு, வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்ததோடு சுமார் 131 சவரன் நகைகள் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

கைரேகை பதிவுகள், அருகிலுள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments