தமிழகத்தில் பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்கும் வகையில் விதிகள் வகுக்க வேண்டும்.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..

0 2306
தமிழகத்தில் பேனர்கள் வைப்பதை முழுமையாக தடை செய்யும் வகையில் உரிய விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பேனர்கள் வைப்பதை முழுமையாக தடை செய்யும் வகையில் உரிய விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரத்தில் அமைச்சரை வரவேற்பதற்கு பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 12 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவத்தை குறிப்பிட்டு, தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொடிக்கம்பங்கள், பேனர்கள் வைக்க கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவு மீறப்படுவதாக மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து அனுமதியின்றி பேனர்கள் வைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை எனக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, மாவட்டங்களுக்கும், தாலுகா நீதிமன்றங்களுக்கும் தாம் ஆய்வு நடத்த சென்ற போது வழியில் ஏராளமான பேனர்களை பார்த்ததாக தெரிவித்தார். பின்னர், மனு குறித்து 6 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கும், திமுகவுக்கும் உத்தரவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments