காஞ்சிபுரத்தில் பச்சையப்பாஸ், செங்கல்வராயன் துணிக்கடைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

0 4125

வரி ஏய்ப்பு புகாரில் காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரத்தை தலைமையிடலான கொண்ட பட்டுப்புடவை விற்பனையில் பிரபல நிறுவனமான காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் சென்னை மற்றும் வேலூரிலும் இயங்கி வருகிறது.

 கடந்த சில மாதங்களாக பச்சையப்பாஸ் சில்க்ஸ் நிறுவனம், முறையாக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரில், அந்த நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

பச்சையப்பாஸ் சில்க்ஸ் துணிக்கடையின் உரிமையாளர்கள் வீடு மற்றும் தியாகராய நகர், வேலூரிலுள்ள கடைகள், அலுவலகங்கள் என மொத்தமாக 30 இடங்களில் 200-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர எஸ்.கே.பி. நிதி நிறுவனம், செங்கல்வராயன் சில்க்ஸ் நிறுவனத்திலும் ரெய்டு நடக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments