இரு நாட்களுக்கு கனமழை... விரைவில் வடகிழக்கு பருவமழை

0 3774
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காராணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறினார். 

சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும் அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும். தமிழக கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என புவியரசன் கூறினார்.

தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியகூறுகள் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments