திருச்சி விமான நிலையத்தில் பேஸ்ட் வடிவில் கடத்தி வரப்பட்ட ரூ.59 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

0 4441

திருச்சி விமான நிலையத்தில், பேஸ்ட் வடிவில் கடத்தி வரப்பட்ட 59 லட்சம் ரூபாய் மதிப்பிலான, கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளிடம் சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

அதில், தஞ்சாவூரைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த கர்ணன் பால்பாண்டி ஆகியோர் ஆசனவாயில் மறைத்து ஆயிரத்து 252 கிராம் தங்க பேஸ்ட் கடத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments