ஃபேஸ்புக்கின் பங்கு மதிப்பு, ஒரே மாதத்தில் 15சதவீதம் வீழ்ச்சி..!

0 4201

சமூக ஊடகமான ஃபேஸ்புக்கின் பங்கு மதிப்பு 4 புள்ளி 9 விழுக்காடு சரிவு ஏற்பட்டதையடுத்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க்கிற்கு 6 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஃபேஸ்புக்கின் பங்கு மதிப்பு 15 விழுக்காடு வரை வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இதனால் மார்க்கின் சொத்து மதிப்பு 121 பில்லியன் டாலராகக் குறைந்தது.

பதின்பருவப் பெண்களுக்கு இன்ஸ்டாகிராம் தீங்கானது என்ற தவறான கருத்தும், கடந்த ஜனவரி மாதம் வாஷிங்டனில் நடந்த கலவரம் தொடர்பாக கருத்துக்கள் பரிமாற்றப்பட்டதும் ஃபேஸ்புக்கின் பங்கு மதிப்பு குறையக் காரணம் என்று கூறப்படுகிறது.

இதன் விளைவாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு இறங்கி, பில் கேட்சிற்கு  அடுத்த இடத்திற்கு மார்க் சென்றதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய மார்க்கின் சொத்து மதிப்பும் 140 பில்லியன் டாலர்களில் இருந்து 121 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments