டெல்லியில் பெண்ணின் கழுத்தை அறுத்த நபர், பொதுமக்கள் முன்னிலையில் சாவகாசமாகத் தப்பிச் சென்றார்

0 2712

டெல்லியில் கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்த பெண் கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

துவாரகா பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்த விபா என்ற பெண்ணிடம் தீபக் என்ற நபர் குடிபோதையில் தகராறு செய்தார். இதனை விபா தட்டிக் கேட்டதால் சாவகாசமாக பையில் இருந்த கத்தியை எடுத்த தீபக், யாரும் எதிர்பாராதவகையில் விபாவின் கழுத்தை அறுத்தார்.

பின்னர் நிதானமாக அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனைக் கண்டவர்கள் விபாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே விபா உயிரிழந்தார். இதனிடையே தப்பியோடிய தீபக்கை பொதுமக்கள் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments