ஓ.பி.எஸ்.சின் உறவினர் என்று கூறி, அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி

0 2476

முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆங்காடு பகுதியைச் சேர்ந்த மதனகோபால் என்பவர், தன்னை முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் உறவினர் என்றும், அரசு வேலை வாங்கித் தர முடியும் என்றும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி கமலக்கண்ணன் என்பவரிடம் கூறியுள்ளார்.

இதனை நம்பிய கமலக்கண்ணன் தனது இரு மகள்களுக்கு அரசு வேலைக்காக 44 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும், மதனகோபால் போலி அரசாணையை அளித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அரசாணை போலி என்பதையறிந்து  மத்திய குற்றப்பிரிவில் புகார் செய்தார். இதையடுத்து தலைமறைவாக இருந்த மதனகோபாலை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments