கிருஷ்ணகிரி அருகே வைரப்புதையல் இருப்பதாக கூறி மக்களிடம் மோசடி..5 பேர் கைது

0 1728

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே வைரகற்கள் புதையல் இருப்பதாக கூறி, பொதுமக்களிடம் பல லட்சம் மோசடி செய்ய முயன்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

ராயக்கோட்டை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது கோட்டை காலனியில் பலராமன் என்பவரது வீட்டு மாடியில் சிலர் புதையல் இருப்பதாக கூறி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதை அடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது பலராமன் மற்றும் 4பேர் புதையல் இருப்பதாக கூறி மக்களை ஏமாற்ற முயன்றது தெரிய வந்தது. விசாரணையில் செம்பு பாத்திரத்தில் வெள்ளை நிற கற்களை போட்டு வைரக்கற்கள் என மக்களை ஏமாற்றி வந்தது தெரிய வந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments