5 மாதங்களுக்குப் பின்னர் தமிழக, கேரள எல்லையில் மீண்டும் பேருந்துப் போக்குவரத்து

0 2361

தமிழக, கேரள எல்லைக்கு 5 மாதங்களுக்குப் பின்னர் பேருந்துகள் இயக்கப்பட்டன. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டது.

இதனால் எல்லையில் வசிக்கும் இரு மாநில மக்களும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் முதல் கேரள மாநில பேருந்துகள் எல்லைப்பகுதியான கோட்டை வாசல் வரை இயக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 3ஆம் தேதி முதல் தமிழக - கேரள எல்லையான கோட்டை வாசல் வரை தென்காசியில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அரசு பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments