ஊழியர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை, தனியார் சுங்கக் கட்டண வசூல் மையத்தில், பெஞ்சுகளை கடப்பாரையை கொண்டு உடைக்கும் வீடியோ

0 2163

நாமக்கல் மாவட்டம்  ராசாம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான சுங்கக் கட்டண வசூல் மையத்தில் இருக்கும் பெஞ்சுகளை கடப்பாரையை கொண்டு உடைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த சுங்க கட்டண வசூல் மையத்தில்  பணிபுரிந்து வரும் 77 பேருக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என புகார் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக அவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஊதியம் கேட்டு போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர் வெங்கடேஷ் என்பவர் தொழிலாளர்கள் ஓய்வு எடுக்கக்கூடிய இடத்தில் இருக்கும் கற்களால் ஆன பெஞ்சுகளை கடப்பாரை கொண்டு உடைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments