அண்ணாத்த பாட்டுக்கு படையப்பா மெட்ட சுட்டுப் போட்ட இமான்..!நாசுக்கா கலாய்த்த ரஜினி

0 3764

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அந்த பாடலின் இசை படையப்பா படத்தில் இடம் பெற்ற அறிமுக பாடல் போல உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. பாடலில் படையப்பாவின் சாயல் இருப்பதை ரஜினியே நாசுக்காக சுட்டிக்காட்டிய சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் இசையமைப்பாளர் இமான் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் அதே கம்பீர குரலில் அண்ணாத்த படத்தின் முதல் பாடல் திங்கட்கிழமை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது

யூடியூப்பில் வெளியான சிலமணி நேரத்தில் மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. கேட்டவுடன் பற்றிக்கொள்ளும் தீபாவளி பட்டாசாய் அண்ணாத்த பாடல் ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ள நிலையில் அண்ணாத்த பாடலின் பின்னணி இசையும், 1999 ஆம் ஆண்டு வெளியான படையப்பா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம்பெற்ற ரஜினியின் அறிமுகப் பாடலான எம்பேரு படையப்பா.... பாடலின் பின்னணி இசையும் ஒரே மாதிரி இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

அண்ணாத்த பாடலின் மெட்டை இசையமைப்பாளர் இமான் சுட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் படையப்பா பாடலின் இன்ஸ்பிரேசனில் அமைத்திருப்பார் என்றும் அதனால் அப்படி இருப்பதாக இசை ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

இதற்கிடையே இசையமைப்பாளர் இமானிடம் பேசிய ரஜினி படையப்பா பாடலுக்கு அப்புறம் அதே வைப்ரேசனை அண்ணாத்த பாடலில் உணர்ந்ததாக கூறினார் என்று இமான் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதற்கு அண்ணாத்த பாடல் , படையப்பா பாட்டு போல இருப்பதாக ரஜினி நாசுக்காக சொல்லி இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதே போன்றதொரு சர்ச்சை அனிருத் இசையமைத்த தர்பார் அறிமுக பாடலுக்கும் ஏற்பட்டது. அதற்கெல்லாம் முன்பாக 1997 ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் அருணாச்சலம் படத்தில் இடம் பெற்ற சிங்கம் ஒன்று புறப்பட்டதே என்ற பாடல், தந்தனத்தோம் என்று சொல்லியே என்ற வில்லுப்பாட்டுக்காரன் பாடலின் இன்ஸ்பிரேசனில் அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்ணாத்தயோ, படையப்பாவோ எதுவென்றாலும் ரஜினியை தலைவராக ஏற்றுக் கொண்டுள்ள ரசிகர்களின் கொண்டாட்டம் எப்போதும் வேற லெவல் தான்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments