உத்தரப்பிரதேசம் லக்கிம்பூரில் ,விவசாயிகள் மீது கார் மோதிய வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ்

0 4797

உத்தரப்பிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் மோதிய வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் விவசாயிகள் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, பின்னால் வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதி, நசுக்கி விட்டு செல்கிறது. அதனைத் தொடர்ந்து வரும் மற்றொரு காரும் நிற்காமல் செல்வது படமாக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டத்தின் போது மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரை ஓட்டியதாகக் கூறப்படும் நிலையில், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments