ஷாருக்கானின் மகன் உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

0 3482
ஷாருக்கானின் மகன் உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

மும்பை அருகே சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் சிக்கிய விவகாரத்தில் கைதான நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

கைதானவர்களை ஒரு நாள் காவலில் விசாரித்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர், காவலை நீட்டிக்க கோரி நீதிமன்றத்தை நாடினர். போதைப்பொருள் பயன்படுத்தியது குறித்தும், அதனை வினியோகித்தவர்களை கண்டுபிடிக்கவும் வரும் 11-ஆம் தேதி வரை காவலில் எடுக்க அனுமதிகோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்கில் விசாரணை தொடர்ந்து நடத்தப்படுவது முக்கியமானது என்றும், அது விசாரிப்பவர்களுக்கும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கும் பயனளிக்கும் என்றும் தெரிவித்த நீதிபதி, கைதானவர்களை மேலும் 3 நாட்கள் விசாரிக்க அனுமதி அளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments