நிர்வாண கோலத்தில் இளம்பெண் கொலை? விபரீதமாகிய காதல்

0 6879
நிர்வாண கோலத்தில் இளம்பெண் கொலை? விபரீதமாகிய காதல்

கண்டவுடன் காதல், கல்யாணம் முடிந்ததும் சாதல் என்கிற கதையாக பல காதல் திருமணங்கள் சோகத்தில்தான் முடிகின்றன. அந்த வகையில், திருப்பூரில் தன் மீதான குற்ற வழக்குகளை மறைத்து இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞன், அந்த பெண்ணை நிர்வாணக் கோலத்தில் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

முன்பெல்லாம் திருமணம் என்றால், மாப்பிள்ளை , பெண்ணை பற்றி விசாரிக்க தாய்மாமன்கள்‘ உள்ளிட்ட உறவினர்களை இரு வீட்டாரும் ஏவி விடுவார்கள். உறவினர்கள் வரன்களை துருவி துருவி விசாரித்து நல்லவன் அல்லது அமைதியான பெண் என்று சர்டிபிகேட் கொடுத்த பிறகே, அடுத்தக்கட்ட பேச்சே தொடங்கும். ஆனால், கால ஓட்டத்தில் எல்லாமே ஸ்பீடாக மாறிவிட்டது.

இளம் வயதிலேயே காதல் பற்றிய எந்த புரிதலும் இல்லாமல், தான் காதலிக்கும் நபரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல், திருமணம் செய்து கொள்ளும் பெரும்பாலான பெண்களின் வாழ்க்கை பரிதாபத்தில்தான் முடிந்து போகிறது. அந்த வகையில் திருப்பூரில் 19 வயது இளம் பெண் ஒருவர் தன் காதல் கணவரால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வைஷ்ணவி என்ற 19 வயது பெண், அந்த பகுதியிலுள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும், அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த 23 வயதான அருண்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந் தேதி தாயின் எதிர்ப்பை மீறி அருண்குமாரையே வைஷ்ணவி திருமணம் செய்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு தான் அருண்குமாரின் சாயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளுக்கத் தொடங்கியுள்ளது. கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் அருண்குமாருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்து அதிருப்தி அடைந்த வைஷ்ணவி, அருண்குமாருடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு தகராறு நடக்கும் போது வைஷ்ணவியை அருண்குமார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதாக கூறப்படும் நிலையில், அருணாகுமாரை விட்டு பிரிந்த வைஷ்ணவி அவரது தாயார் வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.

அவ்வப்போது, திருந்தி வாழ்வதாக கூறி வைஷ்ணவியை அழைத்துச் செல்லும் அருண்குமார், அவரை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று போயம்பாளையத்திற்கு வந்து வைஷ்ணவியை தன்னுடன் வந்துவிடுமாறு அழைத்திருக்கிறான் அருண்குமார். தனியாக வீடு பார்த்து வைத்திருப்பதாகவும், இருவரும் சேர்ந்து இனிமேல் சந்தோஷமாக வாழலாம் எனவும் ஆசைவார்த்தை கூறி அழைக்கவே, அதனை நம்பிய வைஷ்ணவி கணவன் அருண்குமாருடன் சென்றிருக்கிறார்.

பண்ணாரியம்மன் நகரிலுள்ள காம்பவுண்டு குடியிருப்பிலுள்ள வீட்டுக்கு வைஷ்ணவியை அருண்குமார் அழைத்துச் சென்றிருக்கிறான். பின்னர் சில மணி நேரம் கழித்து அருண்குமார் மட்டும் வீட்டுக்கு வெளியே வந்து பைக்கில் ஏறி சென்றுவிட்டதாகவும், அதற்கு பிறகு நீண்ட நேரமாக கதவு சாத்தப்பட்டு இருந்ததாகவும், இரவு வரை வீடு சாத்தப்பட்டிருந்த நிலையில், வெகு நேரமாக வைஷ்ணவியின் செருப்பு வாசலிலேயே இருந்ததாலும் சந்தேகமடைந்து அக்கம்பக்கத்தினர் கதவை திறந்து பார்த்த போது, அங்கு வைஷ்ணவி நிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வைஷ்ணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வைஷ்ணவியின் கழுத்தில் நெரிக்கப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதால், கழுத்தை நெறித்து அருண்குமார் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஓராண்டு கூட ஆகாத நிலையில், பெண் உயிரிழந்ததால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் தப்பி ஓடிய அருண்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து வைஷ்ணவி தாயார் மணிமுத்து கூறும்போது, தன் மீதான குற்ற வழக்குகளை மறைத்து, தனது மகளை காதலித்து ஏமாற்றி, எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்ததாகவும், திருமணமாகி ஓராண்டுகூட ஆகாத நிலையில் தனது மகளை துன்புறுத்தி கொலை செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

பெண்கள் தங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் கவனுடத்துடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்துகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments