ஆபரேசன் தியேட்டரை சினிமா தியேட்டராக்கிய தெய்வ மருத்துவர் ..! அறுவை சிகிச்சையிலும் சாதனை..!

0 8521
ஆபரேசன் தியேட்டரை சினிமா தியேட்டராக்கிய தெய்வ மருத்துவர் ..! அறுவை சிகிச்சையிலும் சாதனை..!

திருச்சியில் ஆபரேஷன் தியேட்டரில் நோயாளியை திரைப்படம் பார்க்க வைத்து ஒட்டு உறுப்பு தசை நாண் நரம்பு மாற்று அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளை மிஞ்சும் விதத்தில் அரசு மருத்துவமனை மருத்துவர் குழு வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி கொண்டையம் பள்ளியை சேர்ந்தவர் விஜய் பாண்டியன். கடந்த 2 மாதங்களுக்கு முன் விபத்தில் சிக்கிய இவருக்கு மோதிர விரலில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விரலுக்கு தையல் போட்டுகொண்டுள்ளார். ஆனாலும் காயம்பட்ட அவரது மோதிர விரல் நீட்ட முடியாமல் மடங்கியே இருந்துள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜான் விஸ்வநாத்திடம் சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவருக்கு MRI ஸ்கேன் செய்து பார்த்ததில் வலது மோதிரவிரலின் மேல் தூக்கும் தசைநாண் நரம்பு முற்றிலும் சிதைந்து போயிருப்பதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிதைந்து போன தசை நாண் நரம்பிற்கு பதிலாக ஒட்டுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி காலை 10 மணியிலிருந்து மதியம்1.30 மணி வரை ஒட்டுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் ஜான் விஸ்வநாத் தலைமையில் அறுவை சிகிச்சை மருத்துவ குழு, சுமார் மூன்றரை மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து முன் கையில் நடுபகுதியில் உள்ள தசை நாண் நரம்பின் ஒரு பகுதியை எடுத்து அதனை மோதிர விரலில் சிதைந்து போன தசைநாண் நரம்பிற்கு மாற்றாக வெற்றிகரமாக பொருத்தினர்.

அறுவை சிகிச்சையின் போது விஜயின் வலது கை மட்டும் மரத்து போகும் நவீன மயக்க மருந்து செலுத்தப்பட்டது. இதனால் அவருக்கு முன்னால் பெறுத்தப்பட்டிருந்த டேபில் முழு சுய நினைவுடன் செல்போனில் திரைப்படம் பார்த்துக்கொண்டும் ஹெட் போனில் பாட்டு கேட்டுக்கொண்டும், உறவினர்களுடன் செல்போனில் பேசிக் கொண்டும் மிகவும் ரிலாக்சாக இருந்தார் விஜய்.

டெண்டான் ப்ரி ஃகிராப்ட் மற்றும் ரிகண்ஸ்ட்ரஷன் என்ற நவீன முறையில் செய்யப்படும் இந்த தசை நாண் நரம்பு மாற்று ஒட்டு அறுவை சிகிச்சையானது, சாதாரண துணை மருத்துவமனையான துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டதோடு, நோயாளிக்கு மட்டும் ஆபரேசன் தியேட்டரை சினிமா தியேட்டராக மாற்றி மகிழ்ச்சியை ஏற்படுத்திய மருத்துவர்களின் இந்த முயற்சி பெரும் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

தற்போது அறுவை சிகிச்சை செய்து கொண்ட விஜய் முழு உடல் நலத்துடன் தேறி வருவதாகவும், தையலிட்டு ஒட்டி வைக்கப்பட்ட தசை நாண் நரம்பு முழுவதும் இணைய 6 முதல் 12 வாரங்கள் ஆகலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோயாளிகளின் உடல் நலனில் அக்கறைகொண்ட மருத்துவர்கள் ஒவ்வொருவரும் நடமாடும் தெய்வங்கங்கள் என்பதில் அய்யமில்லை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments