தமிழ்நாட்டில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது

0 2334

தமிழ்நாட்டில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

முதற்கட்ட தேர்தல் வரும் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து, மாலையுடன் 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 பேர் வாக்களிக்க உள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments