விவசாயிகள் போராட்டம் - உச்சநீதிமன்றம் அடுக்கடுக்காக வினா..?

0 3255
புதிய வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்தத் தடை விதித்துள்ள நிலையில், விவசாயிகள் ஏன் போராட்டம் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் மீண்டும் வினவியுள்ளது.

புதிய வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்தத் தடை விதித்துள்ள நிலையில், விவசாயிகள் ஏன் போராட்டம் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் மீண்டும் வினவியுள்ளது.

டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்க உத்தரவிடக் கோரி விவசாய சங்கங்கள் தொடுத்த வழக்கு அக்டோபர் முதல் நாள் விசாரணைக்கு வந்தபோது, புதிய வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்தத் தடை விதித்துள்ள நிலையில் விவசாயிகள் ஏன் போராட்டம் நடத்த வேண்டும் என ஏற்கெனவே நீதிபதிகள் வினவினர்.

இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லக்கிம்பூரில் 8 பேர் கொல்லப்பட்டது துரதிருஷ்டமான நிகழ்வு என அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார்.

யாருக்கு எதிராகப் போராட்டம்? இந்தப் போராட்டங்களை அரசு எப்படி அனுமதிக்கிறது? இந்தப் போராட்டம் செல்லுமா? என நீதிபதிகள் அடுக்கடுக்காக வினாக்களை எழுப்பினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments