குறை தீர்ப்பு கூட்டத்தில் சமையல் வீடியோ பார்த்து கொண்டிருந்த பெண் அதிகாரி..

0 3740
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில், பெண் அதிகாரி ஒருவர் சமையல் வீடியோ பார்த்து கொண்டிருந்த வீடியோ வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில், பெண் அதிகாரி ஒருவர் சமையல் வீடியோ பார்த்து கொண்டிருந்த வீடியோ வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு அரங்கில் நடைபெற்ற இந்த சிறப்பு கூட்டத்தில், பொதுமக்கள் தங்களது மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர். இதில், கலந்து கொண்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி சுமதி அவரது செல்போனில் சமையல் செய்யும் வீடியோக்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.

இதனை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்த நிலையில், அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவது வேதனையளிப்பதாக கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments