40 பேர் ஒரே பேருந்தில் ஏறி ரகளையில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்..

0 2829
சென்னையில் மாநகரப் பேருந்தில் ஏறி ரகளையில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சுமார் 40 பேரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

சென்னையில் மாநகரப் பேருந்தில் ஏறி ரகளையில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சுமார் 40 பேரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இன்று காலை கீழ்ப்பாக்கம் நோக்கி சென்ற பேருந்தில் ஏறிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், பயணிகளுக்கு இடையூறு செய்தும் பேருந்து படிக்கட்டுகளில் நின்று தாளம் போட்டும் ரகளையில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து ரோந்து வாகனத்தில் சென்ற போலீசார் அந்த பேருந்தில் இருந்து மாணவர்களை இறக்கி, 5 பேர் வீதம் பிரித்து தனித்தனி பேருந்துகளில் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் ரகளை செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசாரிடம் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments