வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பு

0 2754
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரையில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரையில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்கள் உட்பட சிவகங்கை, குமரி, கோவை, நீலகிரி, விருதுநகர், ஈரோடு, திருச்சியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளைய தினம் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழையும், எஞ்சிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் தென் மேற்கு வங்கக் கடல், தென் கிழக்கு அரபிக் கடல், கேரள கடலோரம் மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் இன்றும், நாளையும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments