தமிழ்நாடு மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்குவதற்கான திட்டம் என்ன? - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

0 3097

தமிழ்நாடு மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்குவதற்கான திட்டம் என்ன என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்த அறிக்கையில் ஆந்திர மின் நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மின்சாரத்தை விலை குறைத்து வாங்கியதன் மூலம் மிச்சப்படுத்திய 126 கோடி ரூபாயை நுகர்வோருக்கு திருப்பி அளிக்க முடிவு செய்திருப்பதாகவும், இந்தியாவில் மின் நிறுவனங்கள் ஒரு தொகையை மிச்சப்படுத்தி, அதை வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்தளிப்பது இதுவே முதல் முறை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், தமிழ்நாடு மின்சார வாரியம் ஆண்டுக்கு சராசரியாக 13,000 கோடி இழப்பை சந்திக்கிறது எனக் கூறியுள்ள ராமதாஸ், தமிழகத்தில் நிலுவையில் இருக்கும் மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தினால், தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் நிலை மாறி, குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments