புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவன், தந்தையே விஷ ஊசி செலுத்தி சிறுவனை கொன்றதாக புகார்

0 4445

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவனை தந்தை விஷ ஊசி போட்டு கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்சுப்பள்ளியை சேர்ந்த பெரியசாமி என்பவரது 16 வயது மகன் வண்ணதமிழ், முழங்கால் புற்றுநோயால் கடந்த 2 வருடங்களாக அவதியடைந்து வந்தார்.

இதேபோல் நேற்று மாலையும் மகன் வலியால் துடித்த நிலையில், பெரியசாமி மெடிக்கலில் ஒரு ஊசியை வாங்கி வந்து உறவினர் பிரபுவுடன் சேர்ந்து போட்டதில் தமிழ்வண்ணன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

பெரியசாமி விஷ ஊசி போட்டு மகனை கொன்றுவிட்டதாக அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில், பெரியசாமி மற்றும் பிரபுவை கைது செய்து போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகனுக்கு வலி நிவாரணி ஊசியை மட்டுமே செலுத்தியதாகவும், விஷ ஊசி செலுத்தவில்லை எனவும் தந்தை பெரியசாமி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments