12 மாநில முதலமைச்சர்களுக்கு, நீட் தேர்வு ரத்து தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

0 2770

கல்வித் துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டியதை வலியுறுத்தியும், அதற்குத் தேவையான ஒருங்கிணைந்த முயற்சியை எடுக்கக் கோரியும், 12 மாநில முதலமைச்சர்களுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நீதிபதி இராஜன் குழுவின் அறிக்கையையும், தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம் என்கிற சட்டமுன்வடிவையும் அதில் இணைத்துள்ளார்.

நீட் தேர்வை நடைமுறைப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கை கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளார். மாநில அரசுகளால் நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வரும் மருத்துவ கல்வி நிறுவனங்களில் சேர்க்கை முறையை முடிவு செய்யும் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதன் மூலம் அரசியலமைப்பு அதிகாரச் சமநிலை மீறப்படுகிறது என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments