கிணற்றில் விழுந்த காட்டு யானை..போராடி யானையை மீட்ட வனத்துறையினர்

0 4103

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் வனப்பகுதியில் கிணற்றில் விழுந்த யானையை நள்ளிரவில் நீண்ட முயற்சிக்குப் பிறகு வனத்துறையினர் மீட்டனர்.

கூட்டம் கூட்டமாக கிராமத்தில் புகுந்த யானைகளை கிராம மக்கள் விரட்டி விட்டனர். ஆனால் கிராம மக்களால் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கிணற்றுக்குள் ஒரு யானை விழுந்துவிட்டது.

யானையின் சத்தம் கேட்ட கிராம மக்கள் வனத்துறைக்குத் தகவல் அளித்தனர். கிணற்றை அகலமாகத் தோண்ட ஆரம்பித்த வனத்துறையினர் யானையை பத்திரமாக மீட்டனர். அருகில் உள்ள வனப்பகுதிக்கு அந்த யானை அனுப்பி வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments