10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

0 3851

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ், அந்தந்த பள்ளிகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு கொரோனா காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், முந்தைய செயல்பாடுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழை அந்தந்த பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதிப்பெண் சான்றிதழ் பெறும் மாணவர்கள், அதே பள்ளியிலோ, இணையதளம் வாயிலாகவோ வருகிற 15-ம் தேதி வரை வேலைவாய்ப்பு பதிவை மேற்கொள்ளலாம். 15-ம் தேதி வரை பதிவு மேற்கொள்ளும் அனைவருக்கும் ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கப்பட உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments