உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை...4 விவசாயிகள், 4 பாஜகவினர் என 8 பேர் உயிரிழப்பு

0 2238

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம் புர் பகுதியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் 4 விவசாயிகள், 4 பாஜகவினர் கொல்லப்பட்டனர்.

பாஜகவின் அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பு வாகனம் போராட்டம் நடத்திய விவசாயிகள் கூட்டத்தில் புகுந்து விபத்தை ஏற்படுத்தியதால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் பாஜகவினர் வந்த காரை அடித்து நொறுக்கி தீ வைத்துக் கொளுத்தினர்.

வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் அசிஷ் மிஸ்ரா என்று கூறப்பட்ட நிலையில் தமது மகன் அந்தக் காரை ஓட்டி வரவில்லை என்று அமைச்சர் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments