காபூலில் பெரிய மசூதிக்கு வெளியே குண்டு வெடிப்பு... இருவர் உயிரிழப்பு

0 2231

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மசூதிக்கு வெளியே நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.

அங்குள்ள ஈத்கா பெரிய மசூதியின் வாசலுக்கு அருகே மக்கள் கூடியிருந்த இடத்தில் இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் நிகழ்விடத்திலேயே இருவர் கொல்லப்பட்டனர். மேலும் 35 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தக் குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments