மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்புகிறது காபூல் விமான நிலையம்... 235 உள்நாட்டு பயணிகளுடன் கத்தார் புறப்பட்ட விமானம்..!

0 2373

ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையம் மீண்டும் பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளது.

வெளியேற விரும்பும் 235 உள்நாட்டு பயணிகளை  ஏற்றிக் கொண்டு ஒரு விமானம் கத்தாருக்கு புறப்பட்டுச் சென்றது. தாலிபன்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் மூடப்பட்டிருந்த விமான நிலையம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது.

தாலிபன்களுக்கும் அமெரிக்கா பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளுக்கும் மத்தியஸ்தம் நாடாக கத்தார் செயல்பட்டு வருகிறது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments