சாலையில் திடீரெனத் திரும்பிய கார் மீது மோதாமல் இருக்க முயன்ற லாரி கவிழ்ந்தது...!

0 3995

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திடீரெனச் சாலையின் குறுக்கே திரும்பிய கார் மீது மோதாமல் தவிர்க்கச் சரக்கு லாரியைத் திருப்பியபோது அது கவிழ்ந்ததில் மூவர் காயமடைந்தனர்.

சத்தியமங்கலத்தில் இருந்து அத்தாணி செல்லும் சாலையில் ஒரு கார்  சத்தியமங்கலம் - அத்தாணி சாலையில் இடது ஓரத்தில் சென்றுகொண்டிருந்த கார் திடீரெனச் சாலையின் குறுக்கே வலப்பக்கம் திரும்பியது. அப்போது அத்தாணியிலிருந்து சத்தியமங்கலத்துக்கு வாழைத்தார் ஏற்றி வந்த லாரி கார் மீது மோதாமல் இருக்க அதன் ஓட்டுநர் திடீரெனத் திருப்பினார். இதில் நிலை குலைந்த லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இதில் லாரியில் வந்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் விபத்துக் காட்சி பதிவாகியுள்ளது. அதில் விபத்துக்குக் காரணமான கார் சாலையில் அங்குமிங்கும் வட்டமடித்தது தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments