மன்னார் வளைகுடா கடலில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்...!

0 2753

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

கடந்த மாதம் இணைய வழியில் நடைபெற்ற சர்வதேச கடல் எல்லை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற இந்திய, இலங்கை கடற்படை உயர் அதிகாரிகள், தமிழகம் மற்றும் இலங்கைக்கு இடையே நடைபெறும் கடத்தல் சம்பவங்களைத் தடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து, கடலோர காவல்படையினர் தண்ணீர் மற்றும் மணலில் செல்லும் ஆற்றல் படைத்த ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம் ஒவ்வொரு கடலோர கிராமங்களுக்காகச் சென்று சோதனையிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments