ஐ.பி.எல் - 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி

0 3435

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. ஷார்ஜாவில் நடைபெற்ற 48-வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 164 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் Maxwell 33 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார்.

அடுத்து ஆடிய பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர்கள் KL Rahul மற்றும் Mayank Agarwal முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தனர். இருந்தபோதும் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடத் தவறியதால் பஞ்சாப் அணி 20 ஓவரில் 158 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments