புதிய 11 மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு 1650 இடங்களில் மாணவர் சேர்க்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 2675

தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு 1650 மாணவர்களுக்குச் சேர்க்கை நடைபெறும் என நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய 11 மருத்துவக் கல்லூரிகளில் 850 இடங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், மத்திய அரசு அதிகாரிகளைச் சந்தித்து மேலும் 800 இடங்களைப் பெற நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments