வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து துன்புறுத்திய கணவன் கைது

0 4358
வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து துன்புறுத்திய கணவன் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை அடித்து, உதைத்து கொடுமை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். சமயபுரத்தில் நரசிங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாரத் என்பவருக்கு, சாவித்ரி என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 வருடங்கள் ஆன நிலையில் 9 மாத ஆண் குழந்தையும் உள்ளது.

வரதட்சணை கேட்டு கணவர், மாமியார், மாமனார் என மூவரும் அப்பெண்ணை, தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாமியார் அப்பெண்ணுடன் சண்டையிட்டு தகாத வார்த்தையால் பேசியதுடன் தலை முடியை கத்தரிக்கோலால் வெட்டி கொடுமைப்படுத்தியதாகவும், சொல்லப்படுகிறது.

தாலிகட்டிய கணவனும் தன்பங்கிற்கு அப்பெண்ணை கட்டையால் அடித்து, கொடுமைபடுத்தியதாக கூறப்படுகின்றது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கணவர் பாரத்தை கைது செய்ததுடன், அவனது தந்தையையும், தாயாரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments