உத்தர பிரதேசத்தில் விவசாயிகளின் போராட்டத்திற்குள் கார் புகுந்ததில் 2 பேர் உயிரிழப்பு...!

0 1950

உத்திரப்பிரதேசத்தில், மத்திய இணையமைச்சருக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில், 8 பேர் பலியானதாக தகவல் வெளியாகியிருப்பதால், பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டினால், இந்த துயரச் சம்பவம் நேரிட்டிருப்பதாக விவசாய சங்கங்கள் குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், கலவர பூமியாக மாறியிருக்கும் லக்கிம்பூரி கேரியைச் சுற்றிலும், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் கான்வாய் சென்றபோது, அதனை வழிமறித்து நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் பாதுகாப்பு வாகனம் புகுந்ததால் 2 விவசாயிகள் உயிரிழந்தனர். இதைக் கண்டித்து வாகனங்களைக் கொளுத்தி விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தப் போராட்டம், ஆளும்கட்சியினரின் எதிர்ப்பால் பெரும் வன்முறையாக மாறியதாக சொல்லப்படுகிறது.

வன்முறையைக் கட்டுப்படுத்த, உத்திரப்பிரதேச போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments