மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் இருவரும் உயிரிழப்பு...!

0 10105

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மின்சாரம் பாய்ந்து அப்பா, மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அகரம் பேட்டை கிராமத்தை சேர்ந்த துரைக்கண்ணு அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். தூங்கிக்கொண்டிருந்த அவர் அதிகாலையில் நாய் குறைத்ததால் வெளியே வந்து பார்த்துள்ளார். இரவில் காற்றுடன் பெய்த மழையால் வீட்டின் முன் மின் இணைப்பு ஸ்டே வயர் அறுந்து கிடப்பதை அறியாமல் அவர் அதை மிதித்ததால் மின்சாரம் தாக்கி அலறியுள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த அவரின் மகன் பிரேம் குமார், தன் தந்தையை காப்பாற்ற முயன்ற போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments