மாணவியருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியர் ராஜகோபாலன் மீது வழக்கு...!

0 2965

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவியருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் வழக்கில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் மாணவிகள் தெரிவித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்ததில், இப்போது படிக்கும் மாணவியருக்கும், ஏற்கெனவே படித்த மாணவியருக்கும் ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

இதையடுத்து மே 24ஆம் நாள் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாகக் காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாடு குழந்தைகள் நல ஆணையம் ஆகியோரும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையை முடித்துக் காவல்துறையினர் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments