கடனில் சிக்கித் தவித்த கணவனை அடித்துக் கொன்ற மனைவி, மகன்கள்...!

0 9179

கர்நாடகாவில் சொத்துக்களை விற்க எதிர்ப்பு தெரிவித்து பாக்குத்தோட்ட அதிபரை அடித்துக் கொன்றதோடு, சடலத்தை காரில் வைத்து எரித்ததாக, அவரது மனைவி, 2 மகன்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாக்குத்தோட்ட அதிபர் வினோத் - பினு தம்பதிக்கு விவேக், விஷ்ணு என இரண்டு மகன்கள் உள்ளனர். கொரோனா காரணமாக, தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க பல லட்சம் ரூபாய் கடன் வாங்கிய வினோத், பின்னர் 3 ஏக்கர் நிலம் ஒன்றை விற்று பாதி கடனை அடைத்துள்ளார். எஞ்சிய கடனை அடைக்க, வீட்டையும், நிலங்களையும் விற்பதாக வினோத் முடிவு செய்யவே, எங்கு சொத்துக்களை விற்றுவிட்டால் நடுரோட்டில் நிற்க வேண்டிய நிலை வந்துவிடுமோ என எண்ணி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனைவி தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்த தகராறு பூதாகரமாகி மோதலாக மாற, கடந்த 26-ந் தேதி மனைவியும், இரு மகன்களும் சேர்ந்து வினோத்தை அடித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், உடலை காரில் வைத்து வீட்டிலிருந்து 70 கிலோ மீட்டர் தூரம் கொண்டு சென்று பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments