கதர் துணியால் ஆன உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி நிறுவியது, மகாத்மாவுக்கு அளிக்கப்பட்ட தனித்துவமிக்க மரியாதை - பிரதமர் மோடி

0 2585
கதர் துணியால் ஆன உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி நிறுவியது, மகாத்மாவுக்கு அளிக்கப்பட்ட தனித்துவமிக்க மரியாதை

கதர் துணியால் ஆன உலகின் மிகப்பெரிய இந்திய தேசியக் கொடி நிறுவப்பட்டது, மகாத்மாவுக்கு அளிக்கப்பட்ட தனித்துவமிக்க மரியாதை என பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.

லடாக்கில் சுமார் ஒன்றரை டன் எடை கொண்ட கதர் துணியால் ஆன உலகின் மிகப்பெரிய தேசியக் கொடி, மகாத்மா காந்தியின் பிறந்தநாளை ஒட்டி நிறுவப்பட்டது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, கதர் மீது பேரார்வம் கொண்ட காந்தியடிகளின் பிறந்தநாளில் அவருக்கு செலுத்தப்பட்ட தனித்துவமிக்க மரியாதை என தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தில் காதி மற்றும் கைவினைப் பொருட்களை வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், தற்சார்பு பாரதம் படைக்க கைகோர்ப்போம் என அழைப்பு விடுத்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments