60 ஜோடி மாடுகள் பங்கேற்ற மாட்டு வண்டி பந்தயம் - ஆர்வத்துடன் கண்டுகளித்த பொது மக்கள்...!

0 2353

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த மாடுகளை பொது மக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

புதூர் வட்டாரத்தில் நடைபெற்ற பந்தயத்தில் 60 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பெரிய மாடு, சிறிய மாடு என போட்டிகள் நடத்தப்பட்டன. சிறிய மாட்டு வண்டிகளுக்கும் இரு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது.

இதில் முதல் பிரிவில் சிவகங்கை மாவட்ட மாட்டு வண்டியும், 2 ம் பிரிவில் விருதுநகரை சேர்ந்த மாட்டு வண்டியும் முதலிடம் பிடித்தது. வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்கள் மற்றும் வண்டிகளை ஓட்டி வந்தவர்களுக்கும் விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments