சாலையில் நின்றிருந்த காரை திருட முயன்ற வடமாநில இளைஞன்...!

0 5011

கோவை ஈச்சனாரி அருகே சாலையில் நிறுத்தி வைத்திருந்த காரை பட்டபகலில் திருடிச் செல்ல முயன்ற வடமாநில இளைஞனை, பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்தனர்.

அங்குள்ள தனியார் கல்லூரி முன் போக்ஸ்வேகன் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனை வெகுநேரமாக நோட்டமிட்டிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன், கண்ணாடி வழியாக கம்பியை உள்ளே விட்டு கார் கதவை திறக்க முயற்சித்துள்ளான்.

இதனை கண்டு அங்கிருந்த பொதுமக்கள் இளைஞனை பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். அத்தனை பேர் சுற்றி நின்றிருந்த போதும் கூட கைகட்டுகளை அவிழ்க்கவும், தப்பவும் முயற்சித்த இளைஞனை, பொதுமக்கள் ஆத்திரத்தில் தாக்கினர். பின்னர் அவனை போத்தனூர் போலீசில் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments