பணம் வந்த மகிழ்ச்சியில் ATM மையத்திற்குள்ளேயே துள்ளிக் குதித்து ஆட்டம் போட்ட பெண் - வைரல் வீடியோ

0 6440

ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்த பெண் ஒருவர், பணம் வந்த மகிழ்ச்சியில் அங்கேயே துள்ளிக் குதித்து ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோவில், பெண் ஒருவர் ஏ.டி.எம். மையத்தில், ரகசிய எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு கொடுத்து விட்டு பணம் வருவதற்காக காத்திருந்தார்.

பணம் எண்ணப்படும் சத்தத்தை கேட்டு உணர்ச்சி பெருக்கெடுத்து அந்த பெண் ஆடத் தொடங்கினார். பின்னர், பணம் வெளியே வந்ததும் அதை எடுத்துக் கொண்டு குத்தாட்டம் போட்டுவிட்டு, ஏ.டி. எம். இயந்திரத்திற்கு ஒரு கும்பிடு போட்டார்.

 
 
 
View this post on Instagram

A post shared by memes | news | comedy (@ghantaa)



ஒவ்வொரு மாதமும் சம்பள பணம் வரும் போது இதேமாதிரியான மகிழ்ச்சியை உணருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இத வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்ட என்ற விபரங்கள் தெரியவரவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments