பாகிஸ்தானில் இருந்து டிரோன் மூலம் போடப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள்... பாகிஸ்தான் எல்லை அருகே ஆயுதங்கள் கண்டெடுப்பு

0 2588

பாகிஸ்தானில் இருந்து வந்த டிரோன்கள் மூலம் போடப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் காஷ்மீர்க் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்கு டிரோன்களில் வெடிகுண்டுகளை அனுப்பி வெடிக்கச் செய்ததை அடுத்து, அது குறித்து ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர் விழிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் காஷ்மீரில் பாகிஸ்தான்  எல்லையில் இருந்து ஆறு கிலோமீட்டர் உட்பகுதியில் சவுஞ்சனா என்னுமிடத்தில் ஒரு பையைக் காவல்துறையினர் கண்டெடுத்தனர். அதில் ஏகே வகையையைச் சேர்ந்த ஒரு துப்பாக்கி, 30 தோட்டாக்கள், ஒரு தொலைநோக்கி ஆகியவை இருந்தன. பாகிஸ்தானில் இருந்து டிரோன் மூலம் இவை இங்குப் போடப்பட்டிருக்கலாம் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments